அமில வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வினோதினியின் இறுதிச் சடங்கு இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் சுரேஷ் என்பவர் அமிலம் ஊற்றியதில், வினோதியின் முகம் முழுவதும் வெந்து போனது. இரண்டு கண்களும் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கோயம்பேட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வினோதினியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
                                                                                    - நாகை மகாகிருஷ்ணன்