டெல்லியில் ஓடும்பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்ட சம்பவம் , நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு
ஆளாக்கப்பட்டுள்ளார்.
புதுவை போலீசார் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். புதுச்சேரி திருப்புவனை
பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வில்லியனூர்
சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்
திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மாணவி விழுப்புரம் பேருந்து நிலையில் தான் இருப்பதாக கூறியுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணை போது , தான் வழக்கமாக செல்லும் தனியார்
பேருந்து நடத்துனர் முத்து மற்றும் அவரது நண்பர் வெங்கடாசலபதி ஆகியோர்
தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-நாகை மகாகிருஷ்ணன்