நாகையில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விளைநிலங்கள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆய்வு

     நாகை மாவட்டத்தில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 ஆண்டுகள் வரை விவசாயம் செய்ய முடியாது என மத்திய  சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். கசிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்பு அவர், இதனைக் கூறினார்.
அடியக்கமங்கலம் பகுதியில் இருந்து நரிமணத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. ஓ.என்.ஜி.சி. -நி’றுவனத்திற்கு  சொந்தமான இந்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் மஞ்சவாடி, கருணாவளி ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று பார்வையிட்டார்.
ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரிகளும், விவசாயிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், எண்ணெய் கசிவு ஏற்பட்ட பழைய குழாய்கள் அப்புறப்படுத்தப்படும்  என கூறினார். எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
-நாகை மகாகிருஷ்ணன்