இலங்கை தமிழர்களை நாகை மீனவர்களை மீட்டனர்.
கடந்த 21 நாட்கள் உணவின்றி கடலில் தவித்த 4 சிங்களவர்கள் உள்பட 65 இலங்கை தமிழர்களை நாகை மீனவர்களை மீட்டனர்.
கடந்த 21 நாட்கள் உணவின்றி கடலில் தவித்த 4 சிங்களவர்கள் உள்பட 65 இலங்கை தமிழர்களை நாகை மீனவர்களை மீட்டனர்.
இலங்கையில் யாழ்ப்பாணம், வல்வெட்டித் துறை, பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் 65 பேரும் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் கடந்த மாதம் 24-ந் தேதி விசைப் படகில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.3 லட்சம் புரோக்கரிடம் கொடுத்ததாக தெரிகிறது. இரண்டு நாள் பயணத்திற்கு பிறகு விசைப்படகு நாகைக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் பழுதானதாக கூறப்படுகிறது.
கடலுக்குள் தத்தளித்த இவர்களை, நாகை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் நாகை போலீஸாரும், கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்தினர். பின்னர்கள் இவர்கள் அனைவரும் நாகையில் தங்க வைக்கப்பட்டனர். -நாகை மகாகிருஷ்ணன்