ஆந்திராவில் அணு உலைக்கு எதிர்ப்பு


           ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கொவாடா கிராமத்தில் 6 அணுஉலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேரை வேறு இடத்தில் குடியமர்த்திவிட்டு, நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரனஸ்தலம் என்னும் இடத்தில் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய எரிசக்தி துறையின் முன்னாள் செயலர் இ.ஏ.எஸ். சர்மாவும் கலந்துகொண்டு பேசுவார் என தெரிகிறது.
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு மாறியுள்ள நிலையில், மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணுமின் நிலையத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று சர்மா வலியுறுத்தியுள்ளார்
-பசுமை நாயகன்