கர்நாடக அரசைக் கண்டித்து 3மாவட்டங்களில் கடையடைப்பு

         கர்நாடக அரசைக் கண்டித்து, மூன்று மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. போதிய தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடையடைப்பு நடத்தப்படுகிறது. சுமார் 300 இடங்களில் பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னை என்பதால், போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க அனைத்து தரப்பினரையும் விவசாயிகள் சங்கங்கள் கேட்டுககொண்டுள்ளன. கல்வி நிலையங்களும் ஆதரவு தர வேண்டும் எனவும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தஞ்சையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் மருத்துவமனைகளும், மருந்துக்கடைகளும் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., போன்ற கட்சிகளும் அறிவித்துள்ளன. காவிரியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 10 ஆயிரம் கன அடி நீரை, நேற்றிரவு கர்நாடகா திறந்துவிட்டுள்ள போதிலும், தொடர்ந்து தண்ணீர் திறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதால், இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டம் முழுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-நாகை மகாகிருஷ்ணன்