புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் :அ.தி.மு.க.,வினர் விருப்ப மனு

          புதுச்சேரியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக, அ.தி.முக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
புதுச்சேரியில் அடுத்த மாதம் 4, 8 மற்றும் 10ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்தல், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்றவற்றில் முனைப்பு காட்டி வருகின்றன.
அதிமுக சார்பில், போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணி இன்று துவங்கியது. புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மனுக்கள் பெறப்பட்டன. தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா ஆகியோர் புதுச்சேரி பகுதிக்கும், அமைச்சர் காமராஜ் காரைக்கால் பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
-நாகை மகாகிருஷ்ணன்