திருவாவடு துறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியா சுவாமி முக்தி

        நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் 23 வது மடாதிபதி சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியா சுவாமி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.கடந்த ஏழாம் தேதி உடலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, உடல் நலமடைந்து மடத்திற்கு திரும்பினார்.
இந்நிலையில், இன்று அதிகாலை, 2 மணியளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, கும்பகோணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியா கடந்த 1980 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு 23 வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
          மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறையில் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீன மடத்திற்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது. திருவாவடுதுறை 23-வது திருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச ஸ்ரீலஸ்ரீ தேசிய பராமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.
 -நாகை மகாகிருஷ்ணன்