திருவாவடுதுறை ஆதினத்தின் புதிய மடாதிபதியாக மீனாட்சி சுந்தரம்
பதவியேற்றுள்ளதில் மரபுகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவாவடுதுறையில் 23 வது ஆதினமான சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, புதிய மடாதிபதியாக மீனாட்சி சுந்தரம் பதவியேற்றார்.
ஆனால், 1997ம் ஆண்டு இளைய ஆதினமாக தேர்வு செய்யப்பட்டு, 2002ம் ஆண்டு
ஆதினத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில்
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாத சுவாமிகள் இதற்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தம்மை புதிய ஆதீனமாக நியமிக்க வேண்டும் என்று
இவர் முறையிட்டதை ஆதின மடத்து நிர்வாகம் ஏற்கவில்லை.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர். புதிய ஆதீனமாக
ஆச்சார்ய பட்டம் பெற்றவரே பதவியேற்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால்,
இதற்கு மாறாக திருப்பனந்தாள் மடத்து அதிபரான எஜமான் சுவாமிகளை கொண்டு அவசர
அவசரமாக மீனாட்சிசுந்தரத்துக்கு பட்டாபிஷேகம் செய்வது மரபை மீறுவது என்று
தெரிவித்தார்.
-நாகை மகாகிருஷ்ணன்