புதுச்சேரி : வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு

     புதுச்சேரியை அடுத்த காக்காயன் தோப்பு பகுதியில் திருநங்கையின் வீட்டில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். ராஜலட்சுமி என்ற அவரின் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனினும் வீட்டின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வெடிகுண்டு எந்த வகையானது என்றும், வீசப்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
-நாகை மகாகிருஷ்ணன்